குடிநீர்தொட்டி ஆபரேட்டர் கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


குடிநீர்தொட்டி ஆபரேட்டர் கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 March 2019 10:30 PM GMT (Updated: 7 March 2019 6:50 PM GMT)

குடிநீர்தொட்டி ஆபரேட்டர் கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி கீழக்கடை கிராமத்தை சேர்ந்தவர் காளியண்ணன் (வயது 60). குடிநீர் தொட்டி ஆபரேட்டர். இவர் பரமத்தி சாணிப்பட்டியை சேர்ந்த விவசாயி நாகப்பன் (83) என்பவரின் மருமகள் காயத்ரியுடன் பழகி வந்து உள்ளார்.

இதை நாகப்பன் பலமுறை கண்டித்து உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நாகப்பன், காளியண்ணனை கண்டித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் நாகப்பன் கடப்பாரையால் காளியண்ணனை தாக்கி கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நாகப்பனுக்கு நீதிபதி இளவழகன், ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்த நாகப்பன் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவரை கைது செய்து கோவை சிறையில் அடைக்க போலீ சாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story