மன்னார்குடியில், பொதுமக்களிடம் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி
மன்னார்குடியில் பொதுமக்களிடம் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுந்தரக்கோட்டை,
நாடு முழுவதும் மத்திய அரசால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகம் திறக்கபட்டு பொதுமக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று பொதுமக்களிடம் நேரடியாக காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மக்கள் மருந்தகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். டாக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தின் பயனையும், மருந்து ஆய்வாளர் ராஜதுரை மருந்துகளின் தரத்தை விளக்கியும் பேசினர். முன்னதாக பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் பால.பாஸ்கர் வரவேற்றார். இதில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட மருத்துவ பிரிவு துணைத்தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், நகர பொதுச்செயலாளர் அய்யப்பன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் அறிவுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் மருந்தகம் நிர்வாகி புனிதன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story