தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் புதைத்து வைத்த பீடி இலை பார்சல்கள் பறிமுதல்


தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் புதைத்து வைத்த பீடி இலை பார்சல்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடலில் மணல் திட்டில் புதைத்து வைத்திருந்த பீடி இலை பார்சல்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம், 

இலங்கைக்கு ராமேசுவரம் கடல் பகுதி வழியாக போதைபொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கடலோர போலீசார், கடலோர காவல்படை, கடற்படை, சுங்கஇலாகாவினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து சென்றனர். அப்போது தனுஷ்கோடியில் இருந்து 3-வது மணல் திட்டில் சோதனையிட்டனர். அங்கு சுமார் 500 கிலோ பீடிஇலைகளை பார்சல்களாக்கி, மணலில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது. ஆனால் அங்கு கடத்தல்காரர்கள் யாரும் இல்லை.

இதையடுத்து அந்த பீடி இலைகள் மண்டபம் கடலோர காவல்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டது. பீடிஇலைகளை மணல் திட்டில் பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது பற்றி கடலோர போலீசார், உளவுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடிஇலைகள் சுங்க இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story