நாட்டின் ஜனநாயக மாண்புகளை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி பேச்சு
நாட்டின் ஜனநாயக மாண்புகளை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார்.
பெங்களூரு,
நாட்டின் ஜனநாயக மாண்புகளை நிலைநாட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெங்களூருவில் தேர்தல் ஆணையம், பெங்களூரு மாநகராட்சி, மத்திய பல்கலைக்கழகம் சார்பில் பெங்களூரு சென்டிரல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ஜனநாயக மாண்புகளை நிலைநாட்ட முடியும்.
மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல் வாக்குச்சாவடி எண், வார்டு உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் அதற்கான அதிகாரிகளை சந்தித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் சக்தி தான் நாட்டின் பலம். எனவே ஒரு நாட்டின் நல்ல அரசை தீர்மானிக்க இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களின் பொறுப்பை உண்ர்ந்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜனநாயக கடமையை...
இதில் பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பேசுகையில், ‘வாக்களிப்பது வாக்காளர்கள் ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையை அனை வரும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகத்தில் 52 சதவீத வாக்குகளும், 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கர்நாடகத்தில் 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. 45 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. தேர்தலில் அனைவரும் வாக்களித்தால் மட்டுமே தேர்தல் வெற்றி பெறும். அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் பொது விடுமுறை என்பதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story