நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் கோலார்-கே.எச்.முனியப்பா, கலபுரகி-மல்லிகார்ஜுன கார்கே


நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் கோலார்-கே.எச்.முனியப்பா, கலபுரகி-மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 8 March 2019 3:37 AM IST (Updated: 8 March 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு நடக்கவில்லை

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

கூட்டணி கட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு நடக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தாவணகெரே-எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்

1. பீதர் - ஈஸ்வர் கன்ட்ரே அல்லது சி.எம்.இப்ராகிம் அல்லது விஜய்சிங்

2. பாகல்கோட்டை - பாயக்கா மேட்டி அல்லது வீணா காசப்பச்சன்னவர்

3. விஜயாப்புரா - ராஜூ அலகூரு அல்லது பிரகாஷ்ராதோட்

4. கொப்பல் - பசனகவுடா பாதர்லி அல்லது பசவராஜ் இட்னால்

5. பெலகாவி - அஞ்சலி நிம்பால்கர் அல்லது சன்னராஜ் ஹெப்பால்கர்

6. தார்வார் - வினய் குல்கர்னி அல்லது சாகீர் சனதி

7. ஹாவேரி - பசவராஜ் சிவன்னவர் அல்லது சலீம் அகமது

8. தாவணகெரே - எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன்

9. உத்தரகன்னடா - பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா

10. உடுப்பி-சிக்கமகளூரு - ஆரத்தி கிருஷ்ணா அல்லது விஜய்சங்கர்

சிக்கோடி-பிரகாஷ் ஹுக்கேரி

11. தட்சிண கன்னடா - ரமாநாத்ராய் அல்லது ஐவான் டிசோசா

12. பெங்களூரு மத்தியம் - ரிஸ்வான் அல்லது ஹரிபிரசாத் அல்லது ரோஷன் பெய்க்

13. பெங்களூரு தெற்கு - பிரியா கிருஷ்ணா அல்லது ராமலிங்கரெட்டி

14. பெங்களூரு வடக்கு - நாராயணசாமி அல்லது எம்.ஆர்.சீதாராம்

15. மைசூரு-குடகு - விஜய்சங்கர் அல்லது சூரஜ் ஹெக்டே

16. சிக்கோடி - பிரகாஷ் ஹுக்கேரி

17. கலபுரகி - மல்லிகார்ஜுன கார்கே

18. ராய்ச்சூர் - பி.வி.நாயக்

19. பல்லாரி - வி.எஸ்.உக்ரப்பா

20. சித்ரதுர்கா - சந்திரப்பா

சிக்பள்ளாப்பூர்-வீரப்பமொய்லி

21. துமகூரு - முத்தஹனுமேகவுடா

22. சாம்ராஜ்நகர் - துருவ நாராயண்

23. சிக்பள்ளாப்பூர் - வீரப்பமொய்லி

24. கோலார் - கே.எச்.முனியப்பா

25. பெங்களூரு புறநகர் - டி.கே.சுரேஷ்.

மீதமுள்ள மண்டியா, ஹாசன், சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகள் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதி என்பதால், அதற்கான வேட்பாளர்களின் பெயர்கள் உத்தேச பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story