மாவட்டம் முழுவதும் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் குழந்தைகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
தேனி,
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தேனி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக சுமார் 800 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அத்துடன் 60 நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க உள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் வாரச்சந்தை நடக்கும் இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த பணியில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சிறப்பு முகாம் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று, சொட்டு மருந்து அளிக்கலாம். இத்தகவலை சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story