நாமக்கல் அருகே இலவச வீட்டுமனை, பட்டா வழங்கக்கோரி பெண்கள் உண்ணாவிரதம்


நாமக்கல் அருகே இலவச வீட்டுமனை, பட்டா வழங்கக்கோரி பெண்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 9 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே இலவச வீட்டுமனை, பட்டா வழங்கக்கோரி பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தையில் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சேர்ந்து நியூ காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் காந்திசங்கரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

புதன்சந்தையில் சாலையோரத்தில் 161 குடும்பத்தினர் வசித்து வந்தோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு 4-வழிச்சாலையை அமைத்துவிட்டது. இதனால் நாங்கள் வாடகை வீட்டிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அதில் சிலருக்கு ரேஷன்கார்டு கூட இல்லை. இதன் காரணமாக அரசு வழங்கும் எந்த சலுகையையும் அவர்கள் பெற முடியவில்லை.

எனவே எங்களுக்கு இலவசமாக வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று(நேற்று) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதற்கு மேலும் அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் எங்களின் நாங்கள் அனைவரும் எங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை தாசில்தார்களிடம் ஒப்படைப்பதை தவிர வேறு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story