அதிகாரத்தில் இருந்தபோதே செயல்படுத்தவில்லை: மாநில அந்தஸ்து கோரி போராடியது அரசியல் நாடகம் நாராயணசாமி மீது ரங்கசாமி கடும் தாக்கு
அதிகாரத்தில் இருந்தபோதே செயல்படுத்தாமல் இருந்து விட்டு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தியது அரசியல் நாடகம் என்று நாராயணசாமி மீது ரங்கசாமி கடுமையாக தாக்கினார்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்க தேர்தல் குழு அமைத்துள்ளோம். அந்த குழுவினர் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்குவார்கள். வேட்பாளர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும். அவர் யாராக இருந்தாலும் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இன்றைய சூழலில் தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அந்த அளவுக்கு புதுவை அரசு உள்ளது. எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆட்சியில் புதிய திட்டங்களும் எதுவும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. நாள்தோறும் போராட்டங்கள்தான் நடக்கின்றன.
கருப்பு சட்டை அணிந்து முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதுபோல் புதுவையில் என்றாவது நடந்துள்ளதா? மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால் யார் மீதாவது குறைகூறி காலத்தை கடத்துகிறார்கள்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் யாருக்கு என்ன அதிகாரம் என்பது அனைவருக்கும் தெரியும்? அதனால்தான் நாங்கள் மாநில அந்தஸ்தை கேட்டோம். அப்போது சிறப்பு மாநில அந்தஸ்து என்று காங்கிரசார் கூறினார்கள். இப்போது மாநில அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள். வாங்கிக்கொடுக்கும் நிலையில் இருந்தபோதே அவர்கள் அதை செய்யவில்லை.
ஏனென்றால் அப்போது புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக மாநில அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள். இது அவர்களது இயலாமையை காட்டுகிறது. தற்போது அவர்கள் போராட்டம் நடத்தியது அரசியல் நாடகம்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தோம். அந்த திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். ஆனால் அவற்றையும் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில் எம்.பி. தேர்தல் வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதுவான கட்சி புதுவையில் ஆட்சியில் இருந்தால்தான் இங்கு சிறப்பாக செயல்பட முடியும்.
மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் மாநில பிரச்சினையை பற்றி பேசாமல் மத்திய அரசை எதிர்க்கிறார்கள். இதனால் மக்கள் நல திட்டங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. புதுவை ஆட்சியாளர்கள் பேசிப்பேசியே நிர்வாகத்தை வீணாக்குகின்றனர். நமக்கு சாதகமாகவே கருத்து கணிப்புகள் வருகின்றன. இருந்தாலும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
புதுவையில் மக்கள் விரும்பும் ஆட்சி வரவேண்டும். நமது வெற்றி மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும். அதற்கு அடித்தளமாக இந்த தேர்தல் இருக்கும். நாம் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால், சுகுமாறன், கோபிகா, பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரு, தமிழ்ச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என்று என்.ஆர்.காங்கிரசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். கூட்டணி கட்சியினரை அனுசரித்து செல்லாவிட்டால் பிரசாரத்தின்போது பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர்கள் கருதினார்கள். இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலக திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.

Related Tags :
Next Story