நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 742 வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் தகவல்


நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 742 வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 17 ஆயிரத்து 742 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2019 தொடர்பான பணிகள் அனைத்தும் செம்மையாக நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 5 ஆயிரத்து 908 பேரும், பெண் வாக்காளர்கள் 16 லட்சத்து 28 ஆயிரத்து 89 பேரும், இதரர் 709 பேர் என மாவட்டம் முழுவதும் 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 பேர் உள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 55 துணை வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 742 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல்பாட்டின் நம்பகத்தன்மையினை வாக்காளர்கள் மத்தியில் 3 ஆயிரத்து 583 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணும் மையமாக திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்தியா மந்தீர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (தேர்தல்) பன்னீர்செல்வம், தனி தாசில்தார் பாபு ஆகியோர் உடன் இருந்தார்கள்.


Next Story