வெவ்வேறு இடங்களில் செவிலியர் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் செவிலியர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2019 3:45 AM IST (Updated: 9 March 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் செவிலியர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் நந்தினி (வயது 21). கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர் அலசநத்தம் சாலை திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் நாகம்மாள் (50). இவர் உடல் நலக்குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமல்பட்டி அருகே உள்ள சென்னூரை சேர்ந்தவர் முனிராஜ் (65). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story