திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 2,963 சிலைகள் ஆய்வு அதிகாரிகள் தகவல்
திருவாரூர் தியாகராஜர் கோவில் பாதுகாப்பு மையத்தில் 2,963 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கோவில்களுக்கு சொந்தமான 4,359 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளின் உண்மை தன்மை, தொன்மை நிலை ஆகியவை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில் பழமை வாய்ந்த சிலைகளை கடத்தி விட்டு அதற்கு மாற்றாக வேறு சிலைகளை வைத்துள்ளனரா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது 5-வது கட்டமாக ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
இதில் தொல்லியல்துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் தலைமையில், 40 தொல்லியல் துறையினர் மற்றும் போலீசார் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகளை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை நடந்த ஆய்வில் 5 சிலைகள் போலியானைவ என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 471 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதுவரை 2,963 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Tags :
Next Story