தஞ்சை மாநகராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் 70 மையங்களில் இன்று நடக்கிறது
தஞ்சை மாநகராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் 70 மையங்களில் இன்று நடக்கிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரெயில் நிலையம், பெரியகோவில் பகுதியிலும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மேலும் 21 பள்ளிகள், 15 சத்துணவு மையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 70 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. மேலும் 2 நடமாடும் குழுவும் செயல்படுகிறது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 425 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் மாலை 5 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் உள்புறம் மற்றும் வெளிப்புறம், பெரியகோவில், ரெயில் நிலையம் ஆகிய 6 இடங்களில் போலியோ சொட்டு மருந்து தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story