நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது


நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 10 March 2019 4:00 AM IST (Updated: 10 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் தொடர்பாகவும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 20 தலைமை கண்காணிப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019-ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் முன்னேற்பாடு குறித்தும், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் தொடர்பாகவும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள 20 தலைமை கண்காணிப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் ஒவ்வொரு தலைமை கண்காணிப்பு அலுவலர்களுக்கும் தேர்தல் தொடர்பான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இ.வி.எம். மேலாண்மை, வாகன மேலாண்மை, தேர்தல் பணிக்காக அலுவலர்களை நியமனம் செய்தல், தேர்தல் நடத்தை விதிகள், செலவின கண்காணிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பதற்றமான வாக்குசாவடிகளை கண்காணித்தல், வாக்குச்சீட்டு, ஊடக மேலாண்மை, கணினியாக்கம், தேர்தல் தொடர்பாக திட்டமிடல் ஆகிய தலைப்புகளில் மேற்படி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார். மேலும், அனைத்து தலைமை கண்காணிப்பு அலுவலர்களும், அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை செவ்வனே செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் அழகிரிசாமி, ஜெய்னுலாப்தீன் மற்றும் தலைமை கண்காணிப்பு அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் சட்டமன்ற அளவிலான தலைமை பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். 

Next Story