திருப்பூர் மாவட்டத்தில் 31 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் 31 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 10 March 2019 4:00 AM IST (Updated: 10 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 31 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றிய ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் 31 பேர் கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டனர். இதற்கு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஆணையம் இந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மாவட்டத்துக்குள்ளேயே மாறுதல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி மாவட்டத்தில் 3 முதல் 4 ஆண்டு வரை சொந்த சட்டமன்ற தொகுதியில் பணியாற்றியவர்கள் வேறு சட்டமன்ற தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேயம் ஒன்றிய ஆணையாளராக ரமேஷ், அவினாசி ஒன்றிய ஆணையாளராக அரிகரன், வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக சிவக்குமார், திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அதிகாரியாக ராஜகோபால், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக சந்திரிகா, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக பழனிவேல், கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளராக செல்வராஜ், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக கிருஷ்ணமூர்த்தி, மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக குருவம்மாள், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பாலமுருகன் ஆகியோர் மாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக மகுடேஸ்வரி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக மகேஸ்வரி, மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக அய்யாசாமி, உடுமலை ஒன்றிய ஆணையாளராக மணிகண்டன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக மனோகரன் ஆகியோர் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராக வில்சன், தாராபுரம் ஒன்றிய ஆணையாளராக செந்தில் கணேஷ்மாலா, பல்லடம் ஒன்றிய ஆணையாளராக சண்முகவதி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக சுப்பிரமணியன், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளராக மகேந்திரன், காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மீனாட்சி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக மகேஷ்வரன், தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக கந்தசாமி, குண்டடம் ஒன்றிய ஆணையாளராக ஜீவானந்தம், வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக ஜெயக்குமார் ஆகியோர் மாறுதல் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக கலைச்செல்வி, அவினாசி வட்டார வளர்ச்சி அதிகாரியாக சாந்திலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அதிகாரியாக ஜோதிநாத், உடுமலை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பாலசுப்பிரமணியம், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக பியூலா எப்சிபாய், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக கனகராஜ் ஆகியோர் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பிறப்பித்துள்ளார்.


Next Story