பாபநாசம் காரையாறுக்கு செல்ல அனுமதி மறுப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு
பாபநாசம் காரையாறுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை,
பாபநாசத்தில் இருந்து காரையாறு, முண்டந்துறை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி ஆகிய இடங்களுக்கு விக்கிரமசிங்கபுரம், பாபநாசத்தில் இருந்து ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி கொண்டு சென்று வந்தனர். இந்த நிலையில் வனத்துறையினர் பாபநாசம் வனத்துறை சோதனை சாவடிக்கு மேலே ஆட்களை ஆட்டோவில் ஏற்றி செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் கடந்த 6-ந் தேதி சோதனை சாவடியில் போராட்டம் நடத்தினார்கள். அப்படி இருந்தும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் வேன்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பாபநாசம் மலையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, வனபேச்சிம்மன் கோவில், சேர்வலாறு, காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தோம். தற்போது அங்கு ஆட்டோக்களை இயக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால் வனத்துறையினர் தேக்கு மரக்கடத்தலில் சிக்கிய வேனை வைத்து ஆட்களை ஏற்றி இறக்கி வருகிறார்கள். எனவே மீண்டும் ஆட்டோவை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story