டாஸ்மாக் கடைக்குள் ஊழியர்களை வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடைக்குள் ஊழியர்களை வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 10 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் சென்றனர். பின்னர் திடீரென ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் கூத்தாடிவயல் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மேல்நிலைப்பள்ளி, அய்யனார் கோவில், ராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களுக்கு பின்புறம் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று திறக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் சென்றனர். பின்னர் திடீரென ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மனுவை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையை அரசு திறந்தால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் மிகவும் பாதிக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும். இந்த டாஸ்மாக் கடையை திறந்தால் வரும் தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம் என்று கூறினர். 

Next Story