யாருக்கு வாக்களித்தோம் என அறியும் ‘வி.வி.பேட்’ கருவி தவறான தகவல் சொல்லும் வாக்காளருக்கு 6 மாதம் சிறை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக யாருக்கு வாக்களித்தோம் என அறியும் ‘வி.வி.பேட்’ கருவி அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கருவியில் வரும் தகவல் பற்றி தவறாக கூறும் வாக்காளர் மீது வழக்கு பதியப்பட்டு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும்.
திருச்சி,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பதிவு செய்யும் ஓட்டுகள் தவறாக வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களின் சின்னங்களில் பதிவாகி விடுவதாக அரசியல் கட்சியினர் எழுப்பிய குற்றச்சாட்டு காரணமாக, இந்திய தேர்தல் ஆணையம் முதல் முறையாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என அறியும் ‘வி.வி.பேட்’ ( Vot-er Ve-r-i-f-i-a-b-le Pa-p-er audit tra-il) என்னும் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கருவியானது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் அனைத்து வாக்குச்சாவடிகளும் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழகத்தில் மாவட்டந்தோறும் வாகனங்களில் வி.வி.பேட் கருவியை எடுத்து சென்று ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் அதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திருச்சி மேற்கு, சேலம் வடக்கு தொகுதி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 தொகுதிகளில் மட்டும் ‘வி.வி.பேட்’ கருவியை பயன்படுத்தி அதன் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டது. அதன் செயல்பாட்டு சோதனை வெற்றியடைந்ததையொட்டி, வாக்காளர்களும் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், வி.வி.பேட் கருவியை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு கருவி (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்), வி.வி.பேட் ஆகிய மூன்றையும் நேரடியாக இணைத்து மக்கள் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர் ஒருவர், தன்னுடைய விவரங்களை தெரிவித்த பின்னர் வாக்களிக்க அங்குள்ள ஊழியர் அனுமதி பெற்று செல்லும்போது அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டுமே இருப்பது வழக்கம். வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை மட்டுமே வாக்காளர்களால் பார்வையிட முடியும். பட்டனை அழுத்தி ‘பீப்’ ஒலி கேட்டாலே வாக்குப்பதிவாகி விட்டதாக உறுதி செய்து வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்து விடலாம்.
அதே வேளையில் வி.வி.பேட் கருவி பொருத்தப்பட்ட மின்னணு எந்திரத்தில் ‘பீப்’ என்ற ஒலி கேட்டதும் வி.வி.பேட் கருவியில் இருந்து அச்சடிக்கப்பட்ட துண்டு காகிதம் வரும். அதில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை காணமுடியும். வேட்பாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றிருக்கும். 7 வினாடிகள் மட்டுமே வாக்காளர்கள் இதை காணமுடியும். அந்த துண்டு காகிதம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது. ‘வி.வி.பேட்’ கருவியில் வரும் துண்டு காகிதத்தில், வாக்களித்ததற்கு மாறாக விவரங்கள் இருந்தால் அது குறித்து புகார் செய்யலாம். வாக்குப்பதிவை நிறுத்தி வைக்கவும், பின்னர் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மாற்று கருவி பயன்படுத்த வேண்டிய நிலை வரும்.
அதே வேளையில், இது தொடர்பாக தவறான தகவலை வாக்காளர் வழங்கினால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் தேர்தல் ஆணைய விதிமுறைகளில் வழிவகைகள் உள்ளன. ‘வி.வி.பேட்’ கருவியில் வரும் தகவல் குறித்து தவறான கருத்து கூறுபவர்களுக்கு 6 மாதங்கள்வரை சிறைதண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் எனவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘வி.வி.பேட்’ கருவி பயன்படுத்தப்பட உள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சமீபத்தில் தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.

Related Tags :
Next Story