மாவட்ட செய்திகள்

‘தி.மு.க. அணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி + "||" + DMK team members split and They will come to the AIADMK team

‘தி.மு.க. அணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

‘தி.மு.க. அணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
“தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சங்கரபாண்டியபுரம் சாலையில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள மகளிர் சுகாதார வளாகத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது குறித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள். தேர்தல் அறிவித்த பின் நல்ல முடிவு ஏற்படும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் கலைந்து, அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள். தி.மு.க. கூட்டணி, ஒரு ஒவ்வாத கூட்டணி. தமிழர்களுக்கு விரோதமான தி.மு.க. கூட்டணியை அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை.

“கூடா நட்பு கேடாய் முடியும்” என காங்கிரசை பார்த்து கருணாநிதி கூறியிருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான கட்சி காங்கிரஸ். அப்போது அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது.

எனவே அந்தக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தவர், வைகோ. இப்போது அவர்களது அணியில் சேர்ந்துள்ளார். அவரால் எப்படி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வாக்களித்தனர்
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நிலக்கோட்டையில் வாக்களித்தனர்.
2. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
3. என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? என அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி விடுத்தார்.
4. ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
5. கட்சியை அடமானம் வைத்து விட்டார்: சுயநலத்துக்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார் வைகோ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
சுயநலத்துக்காக கட்சியை அடமானம் வைத்து விட்டு, தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்துள்ளார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.