மக்களை கவரும் ஓவியங்களுடன் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சி
புதுச்சேரி கடற்கரையில் நடந்து வரும் கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சியில் தென்னை மர தட்டி, பனை ஓலைகளில் ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிக்க வைக்கப்பட்டுள்ளன. இவை மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி,
உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கண்நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. புதுவை நகராட்சியும், அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன், புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கடேஷ், எலைட் ரோட்டரி குழுமத்தின் தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கண்நீர் அழுத்த நோயை சரியான நேரத்தில் பரிசோதிக்க தவறினால் நாளடைவில் பார்வை முழுவதும் பறிபோகும் நிலை ஏற்படலாம். கண்நீர் அழுத்த நோய் குணப்படுத்த முடியாதபடி பெருமளவுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்ட பின்னரே அந்த நோய் வந்திருப்பது நோயாளிக்கு தெரியும்.
சத்தமின்றி பார்வையை பறிப்பதனால் இந்த நோயை சத்தமற்ற பார்வை திருடன் என்று கூறுகின்றனர் என்பன போன்ற விழிப்புணர்வு தகவல்கள் இந்த கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டன.
மேலும் கண்காட்சியின் ஒரு பகுதியாக தலைவர்கள் ஓவியங்கள் வரைந்து பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஓவியங்களும் தென்ன மர தட்டி, தென்னை மட்டை, பனை ஓலை, பனை விசிறி, வாட்டர் பாட்டில், தைலகுச்சிகள், கருவேலமர கம்புகள் உள்ளிட்டவைகளை ஒன்றிணைத்து அவற்றில் வரையப்பட்டுள்ளன.
காந்தி, அன்னைதெரசா, பாரதியார், அரவிந்தர், அன்னை மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. 30 அடி உயரத்தில் தென்னை மர தட்டியில் பிரமாண்ட அப்துல்கலாம் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மேலும் ஓவியங்களில் கண்நீர் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகமும் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்தும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அவற்றின் முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துக்கொள்கிறார்கள்.
மேலும் ‘3 டி’ ஓவியமும் இடம் பெற்றுள்ளது. இதில் வெனிஸ் நகரம், திமிங்கலம் மற்றும் வன விலங்குகள் ஆகியவை வரைந்து வைக்கப்பட்டுள்ளன. அதன் முன்பு பார்வையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த விழிப்புணர்வு கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Related Tags :
Next Story