கல்லாவி அருகே மகளை பார்க்க வந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி
கல்லாவி அருகே மகளை பார்க்க வந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள மேட்டு சூளகரை பகுதியை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. இவள் பள்ளி ஒன்றில் 6–ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுமியும் தோழிகள் ஆவார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று 11 வயது சிறுமி, தனது தோழியை பார்ப்பதற்காக அவளது வீட்டிற்கு சென்றாள். ஆனால் அந்த வீட்டில் பெண்ணின் தந்தையான ரஜினி (வயது 40) என்பவர் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அந்த சிறுமி மீது ரஜினிக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை யாரிடமும் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி அழுது கொண்டே இது தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் இதுகுறித்து கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சின்னசாமி வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியான ரஜினியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.