குன்னத்தூரில் பயன்பாட்டிற்கு வராத கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம்
குன்னத்தூரில் பயன்பாட்டிற்கு வராத கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை விரைந்து திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது வடுகனூர் கிராமம். இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.
2016-ம் ஆண்டு இந்த பணிகள் முடிந்த பிறகும் இதுநாள் வரையில் இந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. 3 ஆண்டுகளாக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளின் பணிக்கும், பொதுமக்களின் சேவைக்கும் பயன்படாமல் உள்ள இந்த கட்டிடத்தை விரைவாக திறக்க வேண்டும் என்பதே வடுகனூர் மற்றும் குன்னத்தூர் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
எனவே மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பூட்டி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story