குற்றவாளிகளை கண்டறிவதில் திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி


குற்றவாளிகளை கண்டறிவதில் திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி
x
தினத்தந்தி 11 March 2019 4:00 AM IST (Updated: 11 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற வழக்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற வழக்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திருட்டு, வழிப்பறி, கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்துவது, விபத்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது உள்ளிட்டவை பற்றி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கடந்த மாதத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்ட மற்றும் நீதிமன்ற பணி, போலீஸ் நிலைய அலுவலக பணிகளில் திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழுடன் வெகுமதிகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கி கவுரவித்தார். இந்த கூட்டத்தில், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா (கரூர் டவுன்), சுகுமார் (குளித்தலை), சிற்றரசு (ஆயுதப்படை) மற்றும் தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் மொழி அரசு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர். 

Next Story