புனேயில் 2-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


புனேயில் 2-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

புனேயில்2-ம் வகுப்பு மாணவியைகற்பழித்து கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

புனே,

புனேயில்2-ம் வகுப்பு மாணவியைகற்பழித்து கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுமி மாயம்

புனே கட்ரஜ் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் கடந்த சில நாட்களுக்கு முன் வரஸ்காவ் பகுதியில் உள்ள நீலகண்டேஷ்வர் கோவிலுக்கு பெற்றோருடன் சென்றாள்.

அப்போது கோவிலில் இருந்த கூட்டத்தில் சிறுமி மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை.

இதையடுத்து சிறுமியின் தந்தை இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

கற்பழித்து கொலை

இந்தநிலையில் நீலகண்டேஷ்வர் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் குரன் கிராமப்பகுதியில் உள்ள முத்தா ஆற்றங்கரையில் சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டாள்.

இதையடுத்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story