மும்பையில் நகைப்பறிப்பு 92 சதவீதம் குறைந்தது போலீஸ் தகவல்
மும்பையில் நகைப்பறிப்பு சம்பவங்கள் 92 சதவீதம் குறைந்து விட்டதாக மும்பை போலீஸ் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் நகைப்பறிப்பு சம்பவங்கள் 92 சதவீதம் குறைந்து விட்டதாக மும்பை போலீஸ் தெரிவித்து உள்ளது.
நகைப்பறிப்பு சம்பவங்கள்
மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகைப்பறிப்பு குற்ற சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து இருந்தன. தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.
2010 முதல் 2014-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைப்பறிப்பு வழக்குகள் பதிவாகின. இதனால் பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கே அஞ்சினர்.
இந்தநிலையில், சத்யபால் சிங் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த போது, நகைப்பறிப்பு குற்றவாளிகளை கைது செய்வதற்கு என்று தனிப்படை தொடங்கப்பட்டது. இவர்கள் மும்பையில் 70 இடங்களில் அதிகளவில் நகைப்பறிப்பு குற்றங்கள் நடந்து வருவதை கண்டறிந்தனர்.
92 சதவீதம் குறைவு
இந்த இடங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டன. இதன் விளைவாக தற்போது, நகைப்பறிப்பு சம்பவங்கள் மும்பையில் 92 சதவீதம் குறைந்து விட்டதாக மும்பை போலீஸ் தெரிவித்து உள்ளது.
இதன்படி 2015-ம் ஆண்டு 1,290, 2016-ல் 1,031, 2017-ல் 455 நகைப்பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு நகைப்பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 202 ஆக குறைந்து உள்ளது.
Related Tags :
Next Story