வெளிநாடுவாழ் இந்திய பெண் மானபங்கம் ஸ்வீடன் நாட்டுக்காரர் கைது
வெளிநாடுவாழ் இந்திய பெண்ணை மானபங்கம் செய்த ஸ்வீடன் நாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
வெளிநாடுவாழ் இந்திய பெண்ணை மானபங்கம் செய்த ஸ்வீடன் நாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மானபங்கம்
வெளிநாடு வாழ் இந்திய பெண் (வயது42) ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை விஷயமாக மும்பை வந்து இருந்தார். அவர் அந்தேரி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று ஓட்டல் வரவேற்பு பகுதியில் நின்று கொண்டிருந்த வெளிநாடுவாழ் இந்திய பெண்ணை, குடிபோதையில் அங்கு வந்த ஒருவர் தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல் போட்டார்.
ஸ்வீடன் நாட்டுக்காரர்
இதனால் பயந்து போன அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வெளிநாடுவாழ் இந்திய பெண்ணை மானபங்கம் செய்தவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கார்ல்சன் டேவிட் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story