தர்மபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் 1.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


தர்மபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் 1.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 11 March 2019 5:00 AM IST (Updated: 11 March 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 984 மையங்களில் 1.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநிலம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பெற்று சென்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் தனியார் சொட்டு மருந்து மையங்கள் என மொத்தம் 984 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று 1.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் 17 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் மற்றும் போக்குவரத்து முகாம்கள் ஆகியவற்றின் மூலமும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பணியில் 4 ஆயிரம் பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர். தர்மபுரி பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதே போன்று கலெக்டர் மலர்விழியும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஆஷாபெடரிக், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பார்க்கவி, மாவட்ட தொற்று நோய் மருத்துவ அலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story