மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு - உறவினர் இறுதி சடங்குக்கு சென்ற போது பரிதாபம் + "||" + Hogenakkal Cauvery River Sinking 2 Dead - Relatives Coming to the funeral

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு - உறவினர் இறுதி சடங்குக்கு சென்ற போது பரிதாபம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு - உறவினர் இறுதி சடங்குக்கு சென்ற போது பரிதாபம்
உறவினர் இறுதி சடங்குக்கு சென்ற போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பென்னாகரம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மாது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 30 பேருடன் தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக ஒரு வேனில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று சென்றார். ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் அவர்கள் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் மாது தனது மகன் செல்வம் (வயது 29), சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதுகாடம்பட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் மாரிமுத்து(17) மற்றும் உறவினர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தார்.


அப்போது சிறுவன் மாரிமுத்து காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்ற போது திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், காவிரி ஆற்றில் நீந்தி சென்று சிறுவனை காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வமும் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று காவிரி ஆற்றில் தேடினர். அப்போது சிறுவன் மாரிமுத்து, செல்வம் ஆகிய 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த மாதுவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த உறவினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.