தமிழகத்தில் 353 மருந்தாளுனர் பணியிடங்கள்
தமிழகத்தில் மருந்தாளுனர் பணிக்கு 353 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) தற்போது பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 353 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆண்களுக்கு 220 இடங்களும், பெண்களுக்கு 101 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 18 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்களும் உள்ளன. பிரிவு வாரியான இடஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி
பார்மசி டிப்ளமோ படிப்பு படித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
எஸ்சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற மார்ச் 21-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்தியன் வங்கி வழியாக 25-ந் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்.
தேதி நீடிப்பு
எம்.ஆர்.பி. அமைப்பு, நர்ஸ் பணிகளுக்கு 2 ஆயிரத்து 345 பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நர்சிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 27-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மார்ச் 13-ந் தேதி வரை இந்த அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவை பற்றிய விரிவான விவரங்களை www.tn.mrb.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story