குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள், தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே தாமல் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் நீண்ட தூரம் சென்று, தண்ணீரை எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பெண்கள் அடிக்கடி சாலை விபத்தில் காயம் அடைவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், குடிநீர் கேட்டு அப்பகுதி பொதுமக்கள், தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக, இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீரை லாரிகள் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story