அடிப்படை வசதிகள் கேட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் கேட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு வட்டம் கீச்சலம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுவெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் புதுவெங்கடாபுரம் கிராமத்தில் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் குடிநீர், தெருவிளக்கு, சுடுகாடு என எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரவில்லை. குறிப்பாக குடிநீர் இல்லாமல் நாங்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறோம்.
சுமார் 3 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். தெருவிளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் விஷப்பூச்சி, பாம்பு போன்றவற்றின் தொல்லைகளும் அதிகமாக உள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட வந்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

Related Tags :
Next Story