ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் வாலிபர் கைது
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அன்புராஜன் (வயது55). இவர் சம்பவத்தன்று அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு கத்தரிப்புலம் கோவில்குத்தகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வெற்றிச்செல்வன் (வயது35) என்பவர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றுள்ளார்.
இதை பார்த்த ஓட்டல் உரிமையாளர், வெற்றிச்செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நிற்காமல் சென்றுள்ளார். அங்கிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன், வெற்றிச்செல்வனை சாப்பிட்டதுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜனை தரக்குறைவாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து புகாரின் ே-்பரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிச் செல்வனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Tags :
Next Story