ஜெயங்கொண்டம் அருகே 800 கிலோ புகையிலை பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்


ஜெயங்கொண்டம் அருகே 800 கிலோ புகையிலை பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 8:09 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே 800 கிலோ புகையிலை பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் டிரைவர் கைது.

ஜெயங்கொண்டம்,

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தவேல் தலைமையில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அந்த சரக்கு வேனை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் சரக்கு வேனை ஓட்டி வந்த சின்னசேலத்தை சேர்ந்த டிரைவர் அழகிரியை (வயது 28) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட வேனில் 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது என்று கூறப்படுகிறது. 

Next Story