விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி - விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சகாபுதீன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், துணை செயலாளர்கள் சவுரிராஜன், ராமசாமி, கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், 2018-19-ம் ஆண்டுக்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நதிகளை இணைத்து நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் லட்சுமி, தர்மேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நிதானம், பாலசுப்பிரமணி, ராமநாதன், துணை செயலாளர்கள் மூர்த்தி, சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story