பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாணவ-மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story