திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
திருக்காட்டுப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திருவையாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்காட்டுப்பள்ளி-பூதலூர் சாலையில் அடஞ்சூர்பிரிவு சாலை அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பணம் கொண்டு செல்லப்படுகிறதா?
இதில் திருவையாறு வட்டார வளர்ச்சி அதிகாரி சாமிநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாரிகள், வேன்கள், கார்களில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனையிட்டனர்.

Related Tags :
Next Story