பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 4:15 AM IST (Updated: 14 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை,

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறப்பு நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு போலீசார் அடிபணியக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ராஜேஸ்வரி, கவிதைப்பித்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் ஜனா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story