பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மேலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து மேலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 3:15 AM IST (Updated: 14 March 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மேலூரில் அரசு பாலிடெக்னிக், கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் சங்கத்தினர் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, பொள்ளாச்சியில் நடந்த பெண்கள், மாணவிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோன்று மேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, பொள்ளாச்சியில் பெண்கள், மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இருக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். 

Next Story