வீடியோ காலில் கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது


வீடியோ காலில் கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 March 2019 4:40 AM IST (Updated: 14 March 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகிய 2 கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைதானார்.

மும்பை,

மும்பை சாந்தாகுருசை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த ஜனம் போர்வால் (வயது20) என்ற வாலிபர் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானார்.

இந்தநிலையில் வாலிபர், அந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இருந்து எடுத்து ஆபாசமாக சித்தரித்து அதை ஆபாச வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த மாணவிகளிடம் வீடியோ சாட் மூலம் கலகலப்பாக பேசி அவர்களின் ஆடைகளை அவிழ்க்க சொல்லி அதனை அவர்களுக்கு தெரியாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த ஒளிப்பதிவை மாணவிகளிடம் காட்டி அவர்களை துன்புறுத்தி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார்கள்.

வாலிபர் கைது

இதுகுறித்து அவர்கள் வக்கோலா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ஜனம் போர்வால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவர் விசாரணைக்கு மும்பை கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சாப்ட்வேர் தொழில் நுட்பம்

இந்த குற்றச்செயலில் அவர் கடந்த 3 மாதமாக ஈடுபட்டு உள்ளார். சம்பந்தப்பட்ட மாணவிகள் வீடியோ கால் செய்யும் போது, அப்பெண்களின் போனில் தனது ஒரிஜினல் போன் நம்பர் தெரியாத படியும், அது வெளிநாட்டு நம்பர் போன்று தெரியும்படியும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பான சாப்ட்வேர் தொழில்நுட்ப படிப்பை அவர் படித்து இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story