இன்று தேர்வெழுத இருந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
10-ம் வகுப்பு மாணவர் இன்று (வியாழக்கிழமை) தேர்வெழுத இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி. நகரை சேர்ந்தவர் முரளிக்குமார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துகிருஷ்ணவேணி. இவர்களுக்கு நிகில் (வயது 16), அர்ஜூன் (15) ஆகிய 2 மகன்கள். இதில் அர்ஜூன் அப்பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று (வியாழக்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற அர்ஜூன் சக மாணவர்களுடன் படித்தார். இந்தநிலையில் மாலை அர்ஜூன் அழுதபடியே வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டின் மாடியில் இருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகனை பிணக்கோலத்தில் பார்த்த அவருடைய தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story