மாவட்ட செய்திகள்

சேலத்தில் பரபரப்பு அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.50 ஆயிரம் பறிமுதல் + "||" + Sensation in Salem At the Anganwadi Center The vigilance police Raid Rs 50 thousand confiscated

சேலத்தில் பரபரப்பு அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.50 ஆயிரம் பறிமுதல்

சேலத்தில் பரபரப்பு அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை ரூ.50 ஆயிரம் பறிமுதல்
சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி முருகன் நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள பணியாளர் ஒருவர் வாடகை பணம் வசூலிப்பதில் முறைகேடு செய்வதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மையத்தில் சோதனை நடத்துவதற்காக புகுந்தனர். இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்தும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மையத்தில் உள்ள ஆவணங்கள், கணினியில் உள்ள பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் அங்கு கணக்கில் வராமல் இருந்த ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளனர். புறநகரில் 19 பேரும், மாநகரில் 3 பேரும் உள்ளனர். மாநகர குழந்தை வளர்ச்சி திட்டம் 1-ல் அலுவலராக பாலாம்பிகை உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் உள்ள 45 மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதற்கான வாடகை வசூல் செய்து கொடுக்கப்படும் பணத்தில் ரூ.ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுள்ளார்.

குழந்தைகளுக்கு மதிய உணவிற்கான காய்கறி உள்ளிட்டவை வாங்கியதில் ரூ.500 வரை லஞ்சமாக பெற்றுள்ளார். இவருக்கு மைய அலுவலர்கள் சாந்தி, நூர்ஜகான் ஆகியோர் பணம் வசூலித்து கொடுத்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பாலாம்பிகை, சாந்தி, நூர்ஜகான் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை வரை, துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம், நாமக்கல்லில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
சேலம், நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.8¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. சேலத்தில் பரபரப்பு: பட்டுச்சேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இளம்பெண்
சேலத்தில் திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுச்சேலை, தாலியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இளம்பெண் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சேலம் செவ்வாய்பேட்டையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சேலம் செவ்வாய்பேட்டையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. சேலத்தில் பரபரப்பு: நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
சேலத்தில் நகைக்கடைகளில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சேலத்தில் வியாபாரியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்
சேலத்தில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.