வாசுதேவநல்லூரில் போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


வாசுதேவநல்லூரில் போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 14 March 2019 3:45 AM IST (Updated: 14 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடைபெற உள்ளது.

வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் காளிராஜ் (வயது 29). அவருடைய மனைவி சங்கரேஸ்வரி (25). சம்பவத்தன்று இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கரேஸ்வரி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கரேசுவரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சங்கரேசுவரிக்கு திருமணம் முடிந்து 6 வருடங்களே ஆவதால், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடைபெற உள்ளது. 

Next Story