மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம் + "||" + The wife's death was a tragedy of her husband's death

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்
சுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பல பிள்ளை (வயது 96). இவருடைய மனைவி தாணுபாய் (86). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் கூறி வந்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, சாவிலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் வெள்ளம்; குழந்தையின் கையை தாய் இறுக பிடித்தபடி இறந்து கிடந்த சோகம்
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையின் கையை தாய் இறுக பிடித்தபடி இறந்து கிடந்த உடல்களை கண்டு மீட்பு குழுவினர் கண் கலங்கினர்.
2. பயிற்சி மையத்தில் நேர்ந்த சோகம்: தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்தனர் - 20 மாணவர்கள் கருகி சாவு
பயிற்சி மையத்தில் தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து மாணவ-மாணவிகள் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி பலி ஆனார்கள்.