பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்: தேர்தல் தேதியை மாற்ற அதிகாரியிடம் முறையீடு


பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம்: தேர்தல் தேதியை மாற்ற அதிகாரியிடம் முறையீடு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:58 PM GMT)

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்ய கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

பேராவூரணி,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேராவூரணியில் நீலகண்டபிள்ளையார் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற பிள்ளையார் கோவில்களுள் ஒன்றான இக்கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவில் செயல் அதிகாரி சிதம்பரம் தலைமை தாங்கினார். ஆத்தாளுர் வீரமாகாளியம்மன் கோவில் செயல் அதிகாரி அமரநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முடப்புளிக்காடு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் தேதி

விழா கொடியேற்றத்தை அடுத்த மாதம் 10-ந் தேதி நடத்துவது என்றும், 18-ந் தேதி தேரோட்டத்தை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் அன்று தேரோட்டம் நடப்பதால் தேர்தல் தேதியை மாற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 

Next Story