நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது


நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உதயகுமார். முக்கூடல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஊழியர். இவருடைய மகன் ராஜா (வயது 19). பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 25-ந்தேதி கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் ராஜாவை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அந்த கும்பல் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரை சேர்ந்த சங்கரலிங்கம், மணிகண்டன் உள்பட 8 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் அதே ஊரை சேர்ந்த பால்பாண்டி மகன் சுப்பிரமணியன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுப்பிரமணியனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story