மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே குழந்தை இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The baby is dead in the tragedy The woman committed suicide

திருவள்ளூர் அருகே குழந்தை இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே குழந்தை இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே குழந்தை இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஆர்.பி.ஜி. நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவரது மனைவி ரேவதி (19). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்னர் ரேவதிக்கு பிறந்த ஆண் குழந்தை 7 நாட்களிலேயே இறந்து போனது. குழந்தை இறந்த சோகத்தில் ரேவதி இருந்து வந்தார். அதன் பிறகு அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.


மனவருத்தத்தில் இருந்த அவர் தன் குழந்தை இறந்த சோகத்திலும் தனக்கு மீண்டும் குழந்தை பிறக்காத ஏக்கத்திலும் நேற்றுமுன்தினம் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.