மாவட்ட செய்திகள்

‘ஏ.சி.’ எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால்அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து + "||" + Fire accident at Ashoknagar police station

‘ஏ.சி.’ எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால்அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து

‘ஏ.சி.’ எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால்அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து
சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை,

சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையத்தின் முதல் தளத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏ.சி. எந்திரத்தில் இருந்து கரும்புகை வெளிவர தொடங்கியது. சிறிது நேரத்தில் அங்கு மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அந்த அறை முழுவதும் தீ பரவியது. தீயை அங்கிருந்த போலீசார் அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ‘ஏ.சி.’ எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அசோக்நகர் போலீஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.