ஆனைக்கட்டி அருகே மேலும் ஒரு இடத்தில் தீப்பிடித்தது மருதமலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ - வனத்துறையினர் தீயை அணைக்க போராட்டம்


ஆனைக்கட்டி அருகே மேலும் ஒரு இடத்தில் தீப்பிடித்தது மருதமலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ - வனத்துறையினர் தீயை அணைக்க போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2019 4:30 AM IST (Updated: 16 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

மருதமலையில் 2-வது நாளாக மருதமலையில் 2-வது நாளாக காட்டுத்தீ எரிகிறது. ஆனைக்கட்டி அருகே மேலும் ஒரு இடத்தில் தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகிறார்கள். எரிகிறது. ஆனைக்கட்டி அருகே மேலும் ஒரு இடத்தில் தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகிறார்கள்.

கோவை,

கோவையை அடுத்த மருதமலை அருகே சிறுமலை அடிவார பகுதியில் பட்டா நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று வேகமாக வீசியதால், பட்டா நிலத்தில் இருந்து தீ பரவி வனப்பகுதியிலும் பிடித்தது.

இதனால் காட்டுத்தீயாக பரவி எரிய தொடங்கியது. இதனால் வனத்துறையினரால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடிய வில்லை. வனப்பகுதியில் வறட்சி காரணமாக செடி, மரங்கள் காய்ந்து உள்ளன. இதனால் தீ வேகமாக பரவி வருகிறது.

நேற்று 2-வது நாளாகவும் மருதமலை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதை அணைக்க வனத்துறையினர் போராடி வருகிறார்கள். ஆனால் நேற்று காலையில் சிறுமலையில் இருந்து பிடித்த தீ மருதமலை முருகன் கோவில் வரை பரவி எரிகிறது. காட்டுத்தீயை அணைக்க கூடுதலாக வனத்துறை யினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அங்குள்ள பச்சை இலைகளை கொண்டு அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கோவை வனச்சரகம் ஆனைக்கட்டி தெக்கலூர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் நேற்று மதியம் தீப் பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால், தீ மிகவேகமாக பரவி வருகிறது. அடிவாரத் தில் பிடித்த தீ தொடர்ந்து பரவி எரிந்து இப்போது மலை உச்சிக்கு சென்றுவிட்டது. இதனால் ஏராள மான ஏக்கரில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து விட்டன. மேலும் தீ பரவாமல் இருக்க தீவிர முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தெக்கலூர் பகுதியில் பிடித்த தீயையும் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம். சிறுமலை அடிவாரத்தில் பட்டா நிலத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்து உள்ளனர். அது, வனப்பகுதியில் பிடித்து காட்டுத்தீயாக மாறிவிட்டது. எனவே அந்த ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வனபாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story