சிறப்பு கோர்ட்டில் சிரித்தபடி இருந்ததால் கோபம் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.
சிறப்பு கோர்ட்டில் சிரித்தபடி இருந்ததால் கோபமடைந்த நீதிபதியிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்டார்.
பெங்களூரு,
பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் எம்.எல்.ஏ. ராய்ச்சூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் கடந்த 2008-2013 இடைப்பட்ட பா.ஜனதா ஆட்சி காலத்தில் மந்திரியாக பணியாற்றினார்.
அவர் மந்திரியாக இருந்தபோது, புத்தகம் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிவன்ன கவுடா நாயக் எம்.எல்.ஏ. நேற்று பெங்களூரு சிறப்பு கோா்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் கோர்ட்டில் சிரித்தபடி இருந்ததாக கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்டார்
இதை பார்த்து கோபம் அடைந்த நீதிபதி, எம்.எல்.ஏ.வை பார்த்து, “கோர்ட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இங்கு யாராக இருந்தாலும் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கலாம். ஆனால் கோர்ட்டுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்” என்று கூறினார்.
அதைத்ெதாடர்ந்து வக்கீல்கள் கூறிய ஆலோசனைப்படி சிவன்னகவுடா நாயக் எம்.எல்.ஏ., நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார்.
Related Tags :
Next Story