மாவட்ட செய்திகள்

திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார் + "||" + In Tirupur, Media Certification Monitoring Team Center - Collector KS Palanisamy opened

திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்

திருப்பூரில், ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார்
திருப்பூரில் ஊடக சான்று கண்காணிப்புக்குழு மையத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்றுகாலை நடைபெற்றது. இந்த மையத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் விளம்பரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 8-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள் வைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட சேனல்களை கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளூர் டி.வி. சேனல்களில் வேட்பாளர்கள் குறித்த விளம்பரங்களை பதிவு செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட உள்ள பொதுப்பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்களிடம் மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புதலோடு சமர்ப்பிக்கப்படும். ஊடக விளம்பரங்களை இந்த மையத்தில் ஒப்புதல் சான்று பெற்று வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்த விவரங்களை பத்திரிகை செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஊடக மையம்(மீடியா சென்டர்) செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கீதா பிரியா, மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) ஜெயபாலன், உதவி திட்ட அதிகாரி(கணக்கு) ராதா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.15 கோடியில் குடிமராமத்து பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை
தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை - திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
திருப்பூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடந்தது.
4. வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் விவகாரம்: புகார் தெரிவித்தால் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூரில் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
5. ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பறக்கும் படை வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டார்.