பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது


பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 16 March 2019 4:35 AM IST (Updated: 16 March 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 9-ம் வகுப்புவரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான். அவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியும், அந்த சிறுவனும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையும் கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுவன், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பள்ளிக்கூட மாணவியை அழைத்து சென்றுள்ளான். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவியை வலுக்கட்டாயாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன் பின்னர் மாணவியின் பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்தார்.

Next Story